ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

254 0

 ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை எதிவரும் 12 ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட கோ வொறன்டோ நீதிப் பேராணை மனு  மீதான விசாரணையிலிருந்து, மேன் முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர தனிப்பட்ட காரணத்தினால் விலகிய நிலையில்,  இன்று  மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான ஏ.எல்.எஸ். குணரத்ன மற்றும் பிரியந்த பெர்ணான்டோ ஆகியோர் முன்னிலையில் இம்மனு இன்று மீள விசாரணைக்கு வந்த போது, மனுவை எதிவரும் பெப்ர்வரி 12 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

Leave a comment