தேர்தல் ஆணைக்குழுவை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
டிஜிட்டல் மயப்படுத்துவதற்கான அடிப்படை திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவது தொடர்பிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவை டிஜிட்டல் மயப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் தேர்தலை இலகுவாகவும் அவசரமாகவும் நடாத்த முடியும் என அமைச்சர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.