இலங்கையின் மேல்மாகாணத்தில் வாகன நெரிசல் காரணமாக அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களுக்கான பணியாளர்கள் பணிகளுக்கு தாமதமாகி வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்களுக்கு நெகிழ்வுத்தன்மைக்கொண்ட பணிநேரங்களை அறிமுகப்படுத்தும் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் மேல்மாகாண பிராந்திய அபிவிருத்தி திட்டம் மற்றும் இலங்கை வர்த்தக சம்மேளனம் ஆகியன இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொள்ள உள்ளது.
இந்த ஆய்வு, பெரும் எண்ணிக்கையை கொண்டுள்ள நிறுவனங்கள் மத்தியில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெகிழ்வுத்தன்மையான நேரங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் எந்த நிறுவனங்கள் நன்மையை அடையும் என்ற தகவல் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படவுள்ளது
மேல்மாகாணத்தை பொறுத்தவரையில் வாகன நெருக்கடி காரணமாக ஏற்படும் தாமதங்கள், குறிப்பாக தனியார்துறையில் பாரிய நட்டங்களை ஏற்படுத்துகின்றன என்று பொருளாதார திட்டமிடல் அதிகாரிகள் குறிப்பிடுகின்றர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.