இந்தோனேசியா – இந்த மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 133 பேர் பலி

12950 89

இந்தோனேசியாவில் ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளது என நோய் தடுப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தோனேசியா நாட்டில் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


இதுகுறித்து, இந்தோனேசியாவின் நோய் தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 133 அக அதிகரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் தொடர்பாக 13 ஆயிரத்து 683 நோயாளிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்த பாதிப்பை விட 3 மடங்கு அதிகமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

Leave a comment