வெட் என்ற பெறுமதிசேர் வரி திருத்தச்சட்டமூலம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை சமர்ப்பிக்க உள்ளார்.
இதன்படி குறித்த சட்டமூலம் பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இரண்டாவது சந்தர்ப்பமாக அது அமையும்.
ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் பிரேரணை அமைச்சரவை அங்கீகாரம் பெறாமைக் காரணமாக அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதாக இல்லை என்று உயர்நீதிமன்றம் அறிவித்தது.
இந்தநிலையில் புதிய சட்டமூலம் கடந்த செப்டம்பர் மாதம் 13ஆம் திகதி அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டது.
இதில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.