இந்த நாட்டின் மிகப்பெரிய சாபக்கேடே குடும்ப ஆட்சி எனத் தெரிவித்த பாரிய நகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க வடக்கிலும் தெற்கிலும் ஏற்பட்ட அழிவுகள் இனியும் இடம்பெறாத ஆட்சியை உருவாக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தறை பெளிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
எமது நாட்டில் கடன் நெருக்கடியே மிகப்பெரிய சிக்கலாக உள்ளது, ஜனாதிபதியாகவேண்டும் என சிலர் போராடிக்கொண்டுள்ளனர். ஆனால் நாட்டின் கடன்களை அடைக்கும் வழிமுறை ஒன்றினை இவர்கள் கையாளவில்லை. இந்த நாட்டின் அபிவிருத்திக்கு ஒதுக்கும் நிதியில் மூன்று மடங்கு நிதியை நாட்டின் கடனுக்காக ஒதுக்கவேண்டிய நிலைமை உள்ளது. அதனை அடைக்கவோ பிரச்சினைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது குறித்து சிந்திக்கவோ இவர்கள் எவருக்கும் நேரமில்லாதுள்ளது.