கட்டுநாயக்க விமான நிலையத்தில் வீண் காத்திருப்புகளுக்கு விஷேட திட்டம்

10431 0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு பகுதிகளில் இடம்பெறக் கூடிய தாமதங்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஆலோசனை வழங்கியுள்ளார். 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சேவை பிரிவுகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் நீண்டகால மற்றும் குறுகிய கால திட்டங்களை அடையாளம் காண்பதற்கான மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றது. 

இந்த கலந்துரையாடலில் சுங்க அதிகாரிகள் விமான சேவைகள் பிரிவின் அதிகாரிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர். 

கட்டுநாயக்க விமான நிலையம் நாட்டின் முக்கியமான கேந்திர இடமாகும். ஒரு நாளுக்கு சுமார் 30 ஆயிரம் வரையிலான பயணிகள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர். அவர்களுக்கு தேவையான சேவைகளை சிறந்த தரத்துடன் வழங்க வேண்டியது எமது கடமையாகும். 

ஆகவே புதிய தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி சிறந்த சேவையை வழங்குவது தொடர்பில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

Leave a comment