தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம்? ஶ்ரீலங்கா சுதந்திர தினத்தன்று வடதமிழீழம் கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
வாழ்வதற்கு வழியின்றி உயிர் வாழ சுதந்திரமின்றி சொல்லொனாத் துயரத்தில் வாழும் வடக்கு கிழக்கு மக்களின் உள்ளத்துக் குமுறலை
ஶ்ரீலங்காவின் சுதந்திர தினத்தன்று கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை 9.30 க்கு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
ஶ்ரீலங்கா அரசினாலும் இராணுவத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை தெரிவிக்கும் வடக்கு கிழக்கு மக்களும் பொது அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டு மாபெரும் கண்டன கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்த நிலையில் சரண்டைந்து காணாமல் ஆக்கப்பட்டோர் இதுவரை கண்டறியப்படவில்ல.தமிழர் நிலங்களில் இருந்து இராணுவம் வெளியேறவில்லை.நீண்ட நாள் சிறையில் இருப்போர் விடுதலை செய்யப்படவில்லை மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் தமிழரது பூர்வீக நிலங்கள் சூறையாடப்படுகின்றது.தொல்பொருள் திணைக்களம் ஆய்வு என்ற வகையில் வணக்க ஸ்தலங்கள் ஆக்கிரமிக்கபடுகின்றது.புலிகள் மீளுருவாக்கம் என்று அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படும் அவலம் தொடர்கிறது.
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யபட்டும் காணாமல் ஆக்கப்படும் சூழ்நிலையில் சுதந்திரமான சுவாசக்காற்றை சுவாசிக்க தமிழ் மக்களுக்கு இன்றுவரை தடைகளே காணப்பட்டு வரும் நிலையில் யாருக்கு சுதந்திரம் என்ற கேள்வியே எல்லாவற்றையும் முந்தி கேள்விக்குறியாய் எம்முன் எழுந்து நிக்கிறது.
எனவேதான் தமிழர்களுக்கு எப்போது சுதந்திரம் என்ற தொனிப் பொருளோடு வடக்கு கிழக்கு மக்களின் குரலை சர்வதேசத்திடம் சொல்லி நீதி கேட்கும் தினமாக கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றோம் எனவே அனைத்து வடக்கு கிழக்கு மக்களே பொது அமைப்புக்களே அரசியல் கட்சிகளே மதகுருக்களே நீங்கள் அனைவரும் கட்சி பேதங்களை மறந்து தமிழ் மக்களின் விடிவுக்காக உரிமைக்காக சுதந்திர வாழ்வுக்காக கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கின்றோம்..