புராதன சின்னத்தில் ஏறி புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள 07 பொறியியல் பீட மாணவர்களுடைய பெற்றோர்கள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஆளுநர் செயலகத்தில் நேற்று (30) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் 05 ஆம் திகதி குறித்த வழக்கு விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இதன்போது, புராதன தொல் பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ. மந்தவலவை உடனடியாக தொலைபேசியினுடாக தொடர்பு கொண்டு ஆளுநர் கலந்துரையாடியுள்ளார்.
இந்த மாணவர்கள் திட்டமிட்டு வேண்டுமென்றே செய்த விடயம் அல்லவெனவும், தற்செயலாக இடம்பெற்ற விடயமே இதுவெனவும், தாங்கள் மன்னிப்பு வழங்கி தங்களின் நீதிமன்ற அறிக்கையை சாதகமாக வழங்குமாறும் ஆளுநர் அவரைக் கேட்டுள்ளார்.
அந்த மாணவர்களை சட்டரீதியான முறையில் விடுதலை செய்வதற்கு தான் முயற்சி எடுப்பதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா மேலும் குறிப்பிட்டுள்ளார்.