இலங்கையில் இருந்து பங்களாதேஷ் சென்ற ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து வர்னூர்தி மூலம் சென்ற இவர்கள் டாக்காவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஊடாக டாக்காவுக்கு சென்ற அவர்கள், 370 கிலோகிராம் அழகுசாதன பொருட்களை கொண்டு சென்றமைக்காகவே கைதுசெய்யப்பட்டனர்.
தாம் எடுத்துவந்த பொருட்களை அவர்கள் சுங்கப்பிரிவில் வெளிப்படுத்தவில்லை.
அத்துடன் குறித்த பொருட்களை எடுத்துவருவதற்கான உரிய இறக்குமதி சட்டங்களை அவர்கள் பின்பற்றவில்லை என்றும் பங்களாதேஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் பங்களாதேஸ் பிரஜைகள் என தெரிவிக்கப்படுகிறது.