நீதிமன்றத்தினால் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரரை விடுதலை செய்வதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் மீண்டும் கேட்டுக் கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்வரும் தேசிய சுதந்திர தினத்தன்று ஜனாதிபதியினால் வழங்கப்படும் சிறைக் கைதிகளுக்கான பொது மன்னிப்பின் போது ஞானசார தேரரையும் இணைத்துக் கொள்ளுமாறும் தேரர் கேட்டுள்ளார்.
கொழும்பில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.