மன்னார் மடு, தட்சனாமருதமடு காட்டுப்பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றினைக் கைப்பற்றிய வன்னிப்பிராந்திய போதை ஒழிப்புப்பிரிவினர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதுடன் அங்கிருந்து 187 லீற்றர் கசிப்பு உற்பத்திக்குப்பயன்படுத்தப்படும் கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்குப்பயன்படுத்தப்படும் சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அபேய விக்கிரம தலைமையின் கீழ் செயற்படும் சிறப்பு போதை ஒழிப்புப்பிரிவினருக்குக்கிடைத்த இரகசியத் தகவல் அடிப்படையில் மன்னார் தட்சனமருதமடு காட்டுப்பகுதியில் நேற்று சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையத்தினைச் சுற்றிவளைத்த பொலிசார் அங்கிருந்த 187 லீற்றர் கசிப்பு உற்பத்திக்குப்பயன்படுத்தப்படும் சட்டவிரோத கோடாவினையும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சில உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதுடன் அப்பகுதியைச் சேர்ந்த 51வயதுடைய நபர் ஒருவரையும் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிடம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் பின்னர் இன்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் போதை ஒழிப்புப்பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளர்.