ரஞ்ஜன் சார்பில் சாட்சி சொல்ல ஜனாதிபதி உட்பட 42 பேர் கொண்ட பட்டியல் சமர்ப்பிப்பு

576 0

இரஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் உள்ள நீதி மன்ற அவமதிப்பு வழக்கில், அவர் சார்பில் சாட்சி கூற  ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உட்பட பல்வேறு  அந்தஸ்துகளை வகிக்கும் 42 பேரின் பெயர் உள்ளடங்கிய சாட்சிப் பட்டியல் உயர் நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்ப்ட்டுள்ளது.

நேற்று இந்த பெயர் பட்டியல் இவ்வாறு இரஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  உயர் நீதிமன்ற நீதியர்சர்களான சிசிர டி ஆப்றூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட அகையோர் முன்னிலையில் இது குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போதே இப்பட்டியல் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டது.

 விதானகம சட்ட நிறுவனத்தின் ஆலோசனையின் கீழ்  இந்த சாட்சிப் பட்டியல் இவ்வாரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சாட்சிப் பட்டியலில், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவுக்கு மேலதிகமாக  பத்திரிகை ஆசிரியர்கள்,  இலத்திரணியல் ஊடகங்களின் பிரதானிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் சாதாரண பொது மக்களும் உள்ளடங்குகின்ரனர். 

 42 பேர் கொண்ட  சாட்சியாளர்களுக்கு மேலதிகமாக  பிரதம நீதியர்சர் நலின் பெரேரா பிரதம நீதியர்சர் பதவியை ஏற்று செய்த உரை,  விக்டர் ஐவனின் புத்தகம் ஒன்றும் சான்றாக மன்றுக்கு முன்வைக்கப்ப்ட்டுள்ளது.

சாட்சிப் பட்டியலில்  உள்ளடங்கும் பிரதான சாட்சிய ஆளர்கள் விபரம் வருமாறு: 

ஜனாதிபதி  மைதிரிபால சிரிசேன,  ராவய முன்னாள் ஆசிரியர் விக்டர் ஐவன்,  ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய,  மக்கள் விடுதலை முன்னணி ஊடகப் பிரிவின் பிரதனை,  சிரச, ஹிரு, தெரண தொலைக்காட்சிகளின் பிரதனைகள்,  அனுரகுமார திஸாநாயக்க எம்.பி., 

 நீதிச் சேவை ஆணைக் குழு செயலர்,  பாராளுமன்ற செயலர்,  டைலி மிரர் பத்திரிகை ஆசிரியர், 

 அனிந்தா பத்திரிகை ஆசிரியர்,  கே.டப்ளியூ ஜனரஞ்சன,  சுதந்திர ஊடகவியலஆளர் கசுன் புஸ்ஸெவெல,  நீதிமன்றம் அமைதி திரைப்பட தயாரிப்பளர்  பிரசன்ன விதானகே, உயர் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட 42 பேர் இதில் உள்ளடங்கின்றனர்.         

Leave a comment