65250 கோடி இந்திய ரூபாய் கருப்பு பணம்

324 0

cashபொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இந்திய அரசாங்கம் வழங்கி வாக்குறுதியின் படி, இந்தியர்கள் இதுவரை காலம் மறைத்து வைத்திருந்த 65 ஆயிரத்து 250 கோடி இந்திய ரூபாய்கள் வெளிப்பட்டுள்ளன.

தமது வெளிப்படுத்தப்படாத பணத்தை வெளிப்படுத்த இந்திய அரசாங்கம் வழங்கியிருந்த பொது மன்னிப்பு காலம் காடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது.

இதன்படி, பொது மன்னிப்பு வழங்கப்பட்ட 4 மாதங்களில் இவ்வாறு இந்தியர்கள் தங்களது மறைக்கப்பட்ட பணம் குறித்த விபரங்களை வெளிப்படுத்தியுள்ளதாக இந்திய நிதியமைச்சர் அருன் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார்.

64 ஆயிரத்து 275 இந்தியர்களின் இவ்வாறு தமது கருப்பு பணத்தை வெளியிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.