ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 78-வது இடம்

384 0

2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 3 புள்ளிகள் குறைந்து 78-வது இடத்தில் உள்ளது.

2018-ம் ஆண்டுக்கான ஊழல் நாடுகள் பட்டியலை டிரான்ஸ்பரன்சி இன்டர்நே‌ஷனல் அமைப்பு வெளியிட்டுள்ளது. ஊழலற்ற நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

180 நாடுகள் இடம் பெற்றுள்ள இப்பட்டியலில் இந்தியா 78-வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட குறைவாகும்.

2014-ம் ஆண்டில் ஊழல் நாடுகள் பட்டியலில் இந்தியா 81-வது இடத்தில் இருந்தது. 2015-ம் ஆண்டில் 5 இடம் குறைந்து 76-வது இடத்துக்கு வந்தது. 2017-ம் ஆண்டில் 81-வது இடத்துக்கு சென்ற இந்தியா கடந்த ஆண்டை விட 3 புள்ளிகள் குறைந்தது. தற்போது 78-வது இடத்துக்கு முன்னேறியது.

ஊழலுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 2011-ம் ஆண்டில் நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து ஜன் லோக் பால் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் விளைவாக முந்தைய ஆண்டுகளை விட ஊழல் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் அண்டை நாடான சீனா 87-வது இடத்தில் உள்ளது. மற்றொரு பக்கத்து நாடான பாகிஸ்தான் 117-வது இடம் பிடித்துள்ளது.

ஊழல் மிக குறைந்த நாடுகள் பட்டியலில் டென்மார்க் நியூசிலாந்துகள் முதல் 2 இடங்களில் உள்ளன. சிரியா, சூடான் ஆகிய நாடுகள் கடைசி இடத்தில் உள்ளன. 

Leave a comment