தெஹிவளை மிஹிந்து மாவத்தையிலுள்ள யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான காணி மற்றும் சொத்துக்கள் சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் தாக்கல் செய்துள்ள மனு இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தது.
யோஷித ராஜபக்ஷ மற்றும் யோஷித ராஜபக்ஷவின் பாட்டியான டேசி போரஸ்ட் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது பொலிஸ் நிதி மோசடி பிரிவினர், மில்லேனியம் சிட்டியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் சந்தேகநபர்களின் பெயரில் இருந்த கூட்டுக்கணக்கு சம்பந்தமாக அதன் பணிப்பாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருப்பதாகவும், அது சட்டமா அதிபருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
அதன்படி சட்டமா அதிபரின் ஆலோசனையை எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி பிரிவினர் நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து வழக்கை எதிர்வரும் மே மாதம் 29ம் திகதிக்கு விசாரிக்கு கல்கிஸ்ஸ பிரதான நீதவான மொஹமட் மிஹால் உத்தரவிட்டார்.