தளவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன கட்டுக்கலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி 71 வயதுடைய முதியவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தோட்டத்தில் தனது விவசாய காணியில் வேலை செய்து கொண்டிருந்த வயோதிபர்கள் இருவர் மீது இன்று (30) மதியம் 12 மணியளவில் குளவிகள் சரமாரியாக்க தாக்கியதால் ஒருவர் பலியானதுடன் ஒருவர் வத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குளவிக் கொட்டுக்கு இலக்காகி சில நிமிடங்களில் பிரதேச மக்கள் 1990 க்கு அழைப்பை ஏற்படுத்தி தாக்குதலுக்குள்ளாகிய இருவரையும் துரிதமாக லிந்துலை வைத்தியசாலைக்கு அனுப்பிய போதிலும் கொண்டு செல்லும் வழியிலேயே முதியவர் மரணமடைந்துள்ளார்.
தற்போது சடலமானது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.