இந்தியப் பிரஜைகள் இருவர் கைது

312 0

சட்டவிரோதமான முறையில்  நாட்டில்  தங்கியிருந்த  இந்தியப் பிரஜைகள் இருவர் நேற்று இரவு  7.30 மணியளவில் கைது  செய்யப்பட்டுள்ளனர். 

மேற்படி  இந்திய பிரஜைகள்  இருவரும்  தோப்பு சந்திக்கு அண்மையில் வைத்து கைது செய்யப்பட்டதாக அச்சுவெலிப் பொலிசார் தெரிவித்தனர். 

இவர்களின் நடத்தையில் பொலிசாருக்கு  சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில்  அவர்களின்  கடவுச்சீட்டை  சோதனையிட்ட போதே இவர்கள்  வீசா இன்றி நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில்  தங்கியுள்ளமை தெரிய வந்துள்ளது. 

45 மற்றும்  50 வயதடைய இந்திய பிரஜைகள்  இருவரும்  அச்சுவேலி பகுதியில்  அமைந்துள்ள தொழிச்சாலையொன்றில் தொழில் புரிந்து வந்துள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

சந்தேக நபர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்டுத்தும் நடவடிக்கைகளை இன்றைய தினம்  அச்சுவேலி  பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

Leave a comment