நல்ல நிலையில் இருந்த நாட்டை, சீர்கெட வைக்கும் செயற்பாட்டில் வடக்கு மாகாண முதலமைச்சர் ஈடுபட்டுள்ளார் என ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெறும இந்த குற்றசாட்டை முன்வைத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முனைகிறார்.
அதற்கு ஒருபோதும் இடம்தர முடியாது.
சம்பந்தன் சிறந்த முறையில் செயற்பட்டு வருகிறார்.
அது குறித்து மகிழ்ச்சியடைகிறோம் எனவும் டலஸ் அழகபெறும குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, விக்னேஸ்வரன் வடக்கு தமிழ் மக்களுக்கு செய்யவேண்டியதை செய்யவில்லை.
அதனாலேயே, அவர் இனவாதத்தை தூண்டும் செய்பாட்டில் ஈடுபட்டுள்ளார் என அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
கல்கமுவ பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.