காணிகளை வனவளத் திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணி உரிமையாளர்களால் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு(காணொளி)

21879 0

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் 1990ஆம் ஆண்டு மக்களுக்கு வழங்கப்பட்ட சுமார் 548 ஏக்கர் விவசாய மற்றும் குடியிருப்பு காணிகளை, வனவளத் திணைக்களம் வனப்பகுதி என அடையாளப்படுத்தி காணிகளுக்குள் மக்கள் செல்வதை தடுத்துள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்களால், மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதையடுத்து, இன்று மனித உரிமை ஆணைக்குழுவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஜெயபுரம் வடக்கு கமக்கார அமைப்பு முறைப்பாட்டை பதிவு செய்திருந்த நிலையில், காணித் திணைக்களம் மற்றும் வனவளத்திணைக்கள அதிகாரிகளும் நேற்று விசாரணைக்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த விசாரணைகளின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த, கிளிநொச்சி ஜெயபுரம் வடக்கு கமக்காரர் அமைப்பின் தலைவர் அரசப்பன் ராமர்………….

Leave a comment