எதிர்வரும் ஜனவரி மாதத்தில் நாட்டில் அரசியலில் மாற்றம் ஏற்படும் என முன்னாள் அமைச்சர் குமார் வெல்கம தெரிவித்துள்ளார்.
யட்டியாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் கெட்ட காலம் தற்போது நிறைவு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தங்களுக்கு மேலும் ஐந்து வருடங்கள் ஆட்சியில் இருந்திருக்க முடியும்.
கெட்ட காலத்தினால் அது இடம்பெறவில்லை.
எனினும் மஹிந்தவில் கெட்டகாலம் தற்போது நிறைவடைந்துள்ளது.
19ஆம் சீர்திருத்தில் என்னென்ன திருத்தங்கள் கொண்டுவந்தாலும் ஜனவரியில் அரசியல் மாற்றம் நிச்சயம் ஏற்படும் எனவும் குமார் வெல்கம குறிப்பிட்டார்.