சோனா படைப்புழுவின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 45 ஆயிரம் நிவாரணம் வழங்க அரசாங்கம் 250 மில்லின் ரூபா நிதியினை ஒதுக்கியுள்ளது. இவ் உற்பத்திகளை மேற்கொண்டவர்ளுக்கு இந் நிவாரண தொகை ஈடு செய்யாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க, நட்டஈட்டுத் தொகையினை அதிகரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
வஜிராஷ்ரம விகாரையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதை தெரிவித்த அவர்,
மலையக மக்களின் நியாயமான வேதன கொடுப்பனவு விடயத்தில் கூட்டுவொப்பந்தத்தில் ஈடுப்பட்ட தரப்பினர்களிடையே ஒற்றுமையின்மையின் காரணமாகவே மீண்டும் மலையக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் எனவும் தெரிவித்தார்.