சேனாபடைப்புழுவிற்கும், நிதியமைச்சிற்கும் எவ்வித வேறுப்பாடுகளும் கிடையாது என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டினார்.
வஜிராஷ்ரம விகாரையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சேனா படைப்புழு தாக்கம் தொடர்பில் அரசாங்கம் முறையான எவ்வித நடவடிக்கைகளையும் செயற்படுத்தவில்லை. மாறாக அரசாங்கத்தின் அறிவித்தல் வரை சோள உற்பத்தியினை முன்னெடுக்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளமையானது. பாதிக்கப்பட்ட மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒரு தீர்மானமாகவே கருதப்படும். விவசாய உற்பத்திகளை எவ்வாறு சேனா புழுக்கல் அழித்து வருகின்றதோ அதே போன்று அரசாங்கம் வரிச்சுமையின் ஊடாக அப்பாவி மக்களை துன்புறுத்தி வருகின்றது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.