சொகுசு பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து

5016 0

ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான வீதியில் தலவாக்கலை நகரில் இரு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ்விபத்தானது இன்று மாலை 5.30 மணியளவில்  தலவாக்கலை  மிடில்டன் கடைத் தொகுதிக்கு முன்பாக சொகுசு பஸ் ஒன்றின் மீது முச்சக்கர வண்டி மோதியே குறித்த விபத்து சம்பவித்தது 

ஹட்டனிலிருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் ஒன்றை முந்தி கொண்டு செல்ல முற்பட்ட போதே முச்சக்கர வண்டி தனியார் சொகுசு பஸ்ஸின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. 
இதன் போது இரு வாகனங்களுக்கும் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பாக தலவாக்கலை பொலிஸார் விசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

Leave a comment