ஐக்கிய நாடுகளின் பிரகடனப்படி இந்திய தேசத்தின் தந்தை காந்திமகான் பிறந்த தினமாகிய இன்று சர்வதேச அஹிம்சை தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் 2007 ஜூன் 15ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்கீழ், வருடந்தோறும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதியன்று சர்வதேச அஹிம்ஷை தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்தநிலையில் சர்வதேச அஹிம்சை தினத்தை முன்னிட்டு சர்வதேசம் எங்கிலும் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையிலும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய உதவி உயர்ஸ்தானிகரம் மற்றும் காந்திசேவா அமைப்பு என்பன இணைந்து காந்தி ஜனன தினத்தை கொண்டாடவுள்ளன.
முற்பகல் 9 மணிக்கு யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள துர்கா மணி மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
நிகழ்வில் சிறப்புப்பேச்சாளராக அழைக்கப்பட்டுள்ள, தமிழகம் கோயம்புத்தூர் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஸ்ணன், அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றவுள்ளார்.