வர்த்தக நிலைய உரிமையாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழப்பு

276 0

அம்பலாந்தொட்டை, கந்தேகொட சந்தி பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அதன் உரிமையாளர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இனந்தெரியாத ஒருவர் வர்த்தக நிலையத்தின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு உள்நுழைந்துள்ளதையும் அலுமாரியில் இருந்த ஆடைகள் சிதறிக் கிடப்பதையும் அவதானிக்க முடிந்துள்ளது. 

68 வயதுடைய வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் சடலம் அதற்குள் இருப்பதை உறவினர்கள் கண்டுள்ளனர். 

குறித்த வர்த்தக நிலையம் வழமை போன்று திறக்கப்படாமையால் இருந்ததால் சந்தேகம் ஏற்பட்டு திறந்துபார்த்த போது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment