கிளிநொச்சியில் மாணவன் மீது தாக்குதல் முயற்சி

465 0

கிளிநொச்சி கோணவில் பகுதியில் பாடசாலை மாணவன் மீது தாக்குதல் முயற்சி மேற்கொண்ட நிலையில் குறித்த சிறுவன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். 

கடந்த சில நாட்களிற்கு முன்னர் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவணைதொடர்பில் மாணவர்களை விழிப்பூட்டும் செயற்பாடு இடம்பெற்று வந்தது. 

இதன்போது அங்கு வருகை தந்திருந்த பொலிஸாரிடம் குறித்த பாதிக்கப்பட்ட சிறுவன் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் தகவல் தந்தால் பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்வதில்லை என குற்றம் சாட்டியுள்ளார். 

குறித்த விடயம் தொடர்பில் குறித்த சிறுவனை அப்பகுதியை சேர்ந்த போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் நபர்களால் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்ததாகவும், இவ்விடயம் தொடர்பில் பலரது கவனத்திற்கு கொண்டு சென்றும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஊடகங்களிற்கு இன்று கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் தனது மகன் மீது இனம் தெரியாதோரால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த தாக்குதலில் தனது மகனிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர், கிளிநாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தற்போது சிகிச்சை இடம்பெ்று வருவதாகவும் தெரிவித்த சிறுவனின் தந்தை முறைப்பாடு பதிவு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் பொலிஸாரால் மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

Leave a comment