மாகாணசபை தேர்தலுக்காக நீதிமன்றை நாடவுள்ள பொதுஜன பெரமுன

283 0

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய   பதவி விலக வேண்டிய அவசியம் ஏதும் கிடையாது எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்த பொதுஜன பெரமுன முன்னணி நீதிமன்றத்தை நடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

பொதுஜன பெரமுன முன்னணியின் தலைமை காரியாலயத்தில்  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் பதவி விலகுவது என்பது பொருத்தமற்ற விடயமாகும்.  தேர்தலை விரைவுப்படுத்த கடந்த காலங்களில் தேர்தல் ஆணையாளர் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலே முடிந்துள்ளது. கட்சி தலைவர்களுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகள் முரண்பாடுகளை தோற்றுவிப்பதாகவே அமைந்தது.  பேச்சுவார்த்தைகளை இனி முன்னெடுப்பதால் எவ்விதமான தீர்மானங்களும் பெற முடியாது. 

ஆகவே  மாகாண சபை தேர்தலை நடத்துவதற்காக பொதுஜன பெரமுன முன்னணியினர் தற்போது நீதிமன்றத்தை நாட தீர்மானித்துள்ளனர். இதற்கு தேர்தல்ஆணைக்குழுவின் தலைவரும், ஆணையகமும் ஒத்துழைப்பு வழற்கினால் பாரிய பலமாக காணப்படும்.

Leave a comment