கேப்பாபுலவு போராட்ட மக்களை நீதிமன்றிற்கு அழைத்த பொலிஸார்

3940 0

கேப்பாபுலவு மக்கள் கடந்த 26 ஆம் திகதியன்று தங்கள் வாழ்இடங்களை விடுக்ககோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில் படையினரின் முகாம் வாசலிலிருந்து மக்களை அப்புறப்படுத்துவதற்காக பொலிஸார் பல்வேறு பிரயத்தன முயற்சியினை மேற்கொண்டு வந்த நிலையில் போராட்ட மக்கள் தங்கள் போராட்டங்களை கைவிடாத நிலையில் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட மூவர் மீது குற்றம் சுமத்தி நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். 

கேப்பாபுலவு மாதிரி கிராமத்தினை சேர்ந்த வி.இந்திராணி, மனித உரிமை செயற்பாட்டாளர் க.சந்திரலீலா,நீர்கொழும்பினை சேர்ந்த யோ.விறிட்டா பெணாண்டு ஆகியோர் மீதுவழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இந்த வழக்கின் விசாரணை  இன்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 

 பொலிஸார் பலவேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்கள் குற்றம் சாட்டப்பட்ட போராட்டக்காரர்கள் சார்பாக மன்றில் உள்ள சட்டத்தரணிகள் அனைவரும் கருத்துக்களை முன்வைத்துள்ளதாக நீதிமன்றம் சென்று திரும்பிய போராட்ட காரர்களில் ஒருவரான சந்திரலீலா தெரிவித்துள்ளார்.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாக போராட்டத்தில் ஈடுபடுவதால் படைமுகாமில் உள்ள படையினரின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இராணுவத்திற்கு எதாவது குற்றச்செயல்கள் செய்து விடுவார்கள் என்றும், போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்கள் குற்றச்செயல்கள் ஏதும் செய்யலாம் என்றும் போராட்டத்திற்கு வெளியில் இருந்து யாரும் வரக்கூடாது என்று சொல்லியும் போராட்டத்தினை  முன்னர் செய்த இடத்திற்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை விடுபட்ட எங்கள் காணிகளில் இருந்துதான் நாங்கள் போராட்டம் செய்வோம் என்று மன்றிற்கு தெரிவித்துள்ளோம் இதற்கமைய எங்கள் போராட்டம் தொடர்பில் நீதிமன்றம் இரண்டுநாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள்,பொலிஸார்,அரசதரப்பினர், மக்கள் இணைந்து போராட்ட இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டு நல்ல முடிவினை எடுக்கவேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

தற்சமயம் போராட்டம் நடத்தப்படும் படைமுகாம் வாயிலில் இருந்து 75 மீற்றருக்கு அப்பால் இரண்டுநாட்களும் போராட்ட செய்யலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Leave a comment