ஐக்கிய தேசிய கட்சிக்குள் உறுப்பினர்களுக்கிடையில் சில கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்ற போதும் ஏனைய கட்சிகளுடன் ஒப்பிடும் போது நாம் ஒற்றுமையாகவே உள்ளோம் என தெரிவித்த பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க, கோத்தபாய மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோரே தமக்குள் காணப்படும் ஒற்றுமையின்மையை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.
நுரரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோத்தபாய ராஜபக்ஷ தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் எனத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சமல் ராஜபக்ஷவும் அதனையே தெரிவித்தார். இதிலிருந்து அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகின்றது. அதே வேளை இதற்கு குமார வெல்கம அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஐ.தே.க ஒரு போதும் குடும்ப ஆட்சிக்கு முக்கயத்துவம் வழங்காது என்றார்.