பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீயுடன் ,டம்பெற்ற ,ருதரப்பு பேச்சுவார்த்தையின் பின்னர் ஒன்றிணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் ,தனைக் குறிப்பிட்டுள்ளார்.
நியூஸிலாந்தின் ஒக்லன்ட் நகரில் ,ன்று அதிகாலை ,ந்த சந்திப்பு ,டம்பெற்றது.
,லங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பல்வேறு உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் அவர் ,தன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகமொன்றை தாம் ஸ்தாபித்துள்ளதாகவும் பிரதமர் நினைவூட்டியுள்ளார்.
அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் பதிலாக பயங்கரவாதத்தை தடை செய்யும் முதலாவது சட்டமூலத்தை தாம் ,ன்னும் சில தினங்களில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
அதேபோன்று தடுத்து வைக்கப்பட்டிருந்த பல சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டவர்கள் எனவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.