ஆர்ப்பாட்டக்கார்களின் அழுத்தம் காரணமாக இன்று கையெழுத்திடப்படவிருந்த 700 ரூபாவுக்கான கூட்டுஒப்பந்தன் தற்காலிகமாக பிற்போடப்பட்டது என முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்த போதும், சற்றுமுன்னர் கூட்டு ஒப்பந்தம் இரகியமாக கைசாத்திடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதிய கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடக் கூடாது எனத் தெரிவித்தும் இராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளனத்திற்கு முன்பாக ‘ 1000 ரூபா இயக்கம் ” பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை 10 மணி முதல் முன்னெடுத்திருந்தது.
இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது மகஜர் ஒன்றை தொழிற்சங்கங்களிடம் ஒப்படைக்காமல் முதலாளிமார் சம்மேளனத்திடம் ஒப்படைத்தனர்.
இதன்போது 700 ரூபாவுக்காக கூட்டுஒப்பந்தன் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே கூட்டுஒப்பந்தம் இரகசியமாக கைசாத்திடப்பட்டுள்ளது.