என்டர்பிரைஸ் ஸ்ரீ லங்கா அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களுக்கு 10 மில்லியன் ரூபா வீட்டு கடனுதவியும், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு 20 லட்சம் வரையிலான நிவாரண கடனுதவியை பெற்றுக் கொடுக்க நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளதான அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் தொழில் புரிபவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படவுள்ள 10 மில்லியன் ரூபா கடனானது 15 வருட காலத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும் குறித்த கடன் தொகையினை பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் தகுந்த ஆவணங்களுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.
அத்துடன் தமது வருமானத்தில் ஒரு பகுதியினை உள்நாட்டு வங்கியில் வைப்புச் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவேளை முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சிறிய ரக சிற்றூர்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள நிவாரண அடிப்படையிலான கடனுதவி வழங்கப்படும் . 20 இலட்சம் ரூபா வரை இந்த கடனுதவி வழங்கப்படும். இதற்கான பதிவினை தொடர்புடைய திணைக்களத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும்.