ஆப்கானிஸ்தான் நாட்டின் நங்கர்ஹார் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்வெளி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஈராக், சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கு பொதுமக்களை கொடுமைப்படுத்துவதுடன் அங்கிருந்தவாறு பிறபகுதிகளில் வன்முறை தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொத்துக் கொத்தாக கொன்று வருகின்றனர். இந்த பயங்கரவாதிகளை ஒழித்துக் கட்டும் பணியில் உள்நாட்டு ராணுவ வீரர்களுடன் அமெரிக்கப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஆயிரத்து ஐநூறு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் ஆப்கன் ராணுவத்தினர் இன்று வான்வெளி தாக்குதல் நடத்தினர்.