திப்பிடியவில் போதைப் பொருளுக்கு எதிரான நடைபவனி

678 0

இலங்கை ஜனாதிபதி முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு அரநாயக திப்பிடிய நகரில் அமைந்துள்ள திப்பிடிய முஸ்லிம் மகா வித்தியாலயம் ஏற்பாடு செய்த ‘அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையினை தடுத்தல்’ தொடர்பான விழிப்புணர்வு நடைபவனி நேற்று (25) இடம்பெற்றது.

இந்த நடைபவனியில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் பழைய மாணவர் என பலதரப்பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர். போதை ஒழிப்பு தொடர்பான பல பதாதைகளை ஏந்தி நடைபவனி பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி திப்பிடிய நகரின் ஊடக பாடசாலையை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment