ஊடகவியலாளர்கள் படுகொலையை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்

260 0

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட ஊகவியலாளர்களுக்கு  நீதிகோரியும், கண்டனம் தெரிவித்தும் கவனயீர்ப்புப்  பேராட்ட்மொன்று இன்று யாழில் மேற்கொள்ளப்பட்டது. 
ஊடகப் பணிக்காக உயிர்த்தியாகம்  செய்த ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்.மாநரக சபை மைதானத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந் நிகழ்வில் வடக்கு கிழக்கைச் சேர்ந்த ஊடகவியலளர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்ள் என பலரும் கலந்து கொண்டனர். 
அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து இனம் மொழி இனம் எல்லைகளை கடந்து உன்னதமான ஊடக சுதந்திரத்திற்காக , கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட   மற்றும் காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக  நீதி கோரியும், ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்கு முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் கோள்ளகொள்ளப்பட்டது.
இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களால்,  ரணில் மைத்திரி மெளனம் ஏன், நல்லாட்சி அரசே நாடகம் ஆடாதே, வேண்டும் வேண்டும்  நீதி வேண்டும், நீட்டாதே நீட்டாதே ஊடகங்களுக்க எதிராக கை நீட்டாதே, ஊடகங்களுக்கு அச்சுறுத்தல் விடுக்காதே, கடத்தப்பட்ட ஊடகவியாலர்கள் எங்கே, படுகொலை செய்யப்பட்ட ஊடவியலாளர்களுக்க நீதி எங்கே போன்ற கோசங்களை எழுப்பியதுடன், படுகொலை செய்யப்பட் 45 ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டும், குற்றவாளிகளை கைது செய்வது எப்போது போன்ற பதாதைகளை தாங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment