என்னால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் சட்டபூர்வமானதா – சபாநாயகர்

275 0

அரசியலமைப்பு சபையில் என்னால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் சட்டபூர்வமானதா எனத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய பக்கச்சார்பாக எந்த திர்மானங்களும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் இன்று சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூயடிது. இதன்போது சபாநாயகரின் அறிவிப்பு நேரத்தில் அரசியலமைப்பு சபை தொடர்பாக விளக்கமளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசியலமைப்பு சபையில் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அதன் தலைவரான என்னால் எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் சட்டபூர்வமானதாகவும் பக்கச்சார் அல்லாமலும் எடுக்கப்பட்டதாகும். இதன்போது உறுப்பினர்கள் எவரும் எந்த அழுத்தமும் இல்லாமல் அவர்களது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அனைவரதும் கருத்துக்களை கவனித்தே பக்கச்சார் இன்றி இருத்தீர்மானத்துக்கு வருகின்றோம்.

அத்துடன் கருத்து பேதங்களுக்கு உட்பட்ட சில பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் எமக்கு அனுப்பப்பட்ட பெயர் பட்டியலை ஆராயும்போது சபையில் அனைவரது விருப்பத்தின் அடிப்படையில் அந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

மேலும் சில சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிரேஷ்ட நீதிபதிகளின் கடமை தொடர்பில் தேவையற்ற கருத்துக்களை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். அதேபோன்று  நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் நியமிக்கப்படும்போது அவர்களின் சிரேஷ்ட நிலையை மாத்திரம் கருத்திற்கொள்ளாது பிரதமர நீதியரசரின் பரிந்துரையையும் கவனித்திற்கொள்வோம். இலங்கையின் நீதிமன்றங்களுக்கு அரசியலமைப்பு பேரவை தொடர்பாக நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

Leave a comment