கைதான மூவரை விடுவிக்கக் கோரி பணிப் பகிஷ்கரிப்பு

4872 0

2056811652privetbusசிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள் இன்று அதிகாலை முதல் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொண்டுள்ளன. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பஸ் சாரதி ஒருவர், கடந்த 25ம் திகதி சிலாபம் – காக்கபள்ளிய பகுதியில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதலை மேற்கொண்டது சிலாபம் – கொழும்பு பாதையில் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதி ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை தாக்குதலுக்கு இலக்கானவர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு, தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுபவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சந்தேகநபரை விடுதலை செய்யக் கோரி, சிலாபம் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் இருவர் கடந்த 26ம் திகதி சிலாபம் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.

ஆனால் இதற்கு பொலிஸார் இணங்கவில்லை என, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இருவரும் பொலிஸ் நிலையத்தின் முன் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட முற்பட்டுள்ளனர்.

எனவே தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக கூறி பொலிஸார் அவர்களைக் கைதுசெய்துள்ளனர். இதன்படி, கைதான பஸ் சாரதி உள்ளிட்ட மூவரையும் விடுவிக்கக் கோரி, வேலை நிறுத்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் சந்தேகநபர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Leave a comment