தேசிய பொதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதிநாளான எதிர்வரும் திங்கட்கிழமை சுகததாசா வியாட்டு அரங்கில் வைபவ மொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பின் போதே இது குறித்து தெரிவிக்கப்பட்டது.
இந்த ஊடக சந்திப்பின் போது ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரட்ண , போதைப்பொருள் ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் வைத்தியர் சமந்த கிதல்வஆராச்சி மற்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டு போதைப்பொருள் வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்படவுள்ள செயற்திட்டங்கள் தொடர்பான விளக்கங்களை அழித்தனர்.
அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் ,
நாடு பூராகவும் மெற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் கைது நடவடிக்கைகளின் போது மற்றும் பல்வேறு குற்றசெயல்கள் தொடர்பான கைது நடவடிக்கைகளின் போது சிறந்த முறையில் செயற்பட்ட 1000 இற்கும் அதிகமான பொலிஸ் அதிகாரிகள் வரையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் விசேட விதமாக செயற்பட்ட 105 பொலிஸ் அதிகாரிகளுக்கு மூன்று கட்டங்களுக்கமைய பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இதே வேளை போதைப்பொருள் சுற்றிவளைப்பின்போது இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். ஆகவே அவர்கள் தொடர்பாக கவனத்திற்கொள்ளப்பட்டு அவரகளின் குடும்பத்தினரிற்கும் இவ்வைபவத்தின்போது முக்கிய இடம் அழிக்கப்பட்டுள்தாகவும் குறிப்பிட்டனர்.