இலங்கையின் கிழக்கு கடற்படை மற்றும் திருகோணமலை பொலிஸார் இணைந்து நேற்று வியாழக்கிழமை முன்னெடுத்த விஷேட கண்காணிப்பு நடவடிக்கைகளின் போது, சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சட்ட விரோத மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரெக்டர்கள் 4 மற்றும் கனரக வாகனமொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அவை மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக மூதூர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இம்மாதம் 6 ஆம் திகதியும் மட்டக்களப்பு மற்றும், களுதாவளை ஆகிய பிரதேசங்களிலும் இவ்வாறு சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.