மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரசேத்தில் ஹர்த்தால் இன்று வெள்ளிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநரை மாற்றுமாறு கோரி தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும், மட்டுநகர், கல்லடி, ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, பட்டிப்பளை, வெல்லாவெளி மற்றும் வாழைச்சேனை போன்ற பல பகுதிகளிலும் தமிழ் மக்கள் அவர்களது வர்த்தக நிலையங்களை மூடியுள்ளனர். வீதிகளிலும் சன நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலே காணப்படுகின்றன.
இருந்த போதிலும் இலங்கை போக்குவரத்திற்குச் சொந்தமான பஸ்கள் சேவையிலீடுபடுவதையும் ஒரு சில தனியார் பஸ்கள் சேவையிலீடுபடுவதையும் அவதானிக்க முடிவதோடு, பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளதையும் அதானிக்க முடிகின்றது.
அரச காரியாலயங்களக்கு உத்தியோகஸ்த்தர்கள் சென்றுள்ளதோடு பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் பாடசாலைக்குச் சமூகமளிக்கவில்லை. கொடுக்கவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் வாழும் பிரசேங்களில் பொதுவாக அனைந்து நடவடிக்கைளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.