அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாட்டில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரச ஊழியர்களின் சம்பளம்அதிகரிக்கப்பட்டபோதும் மேலதிக கொடுப்பனவு அதிகரிக்கப்படவில்லை.
இந் நிலையில் 12 வருடங்களுக்கு பின்னர் அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவையும் அதிகரிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் தாக்கல்செய்யப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.