இசைக்கச்சேரியில் அமைதின்மையை ஏற்படுத்திய 19 பேர் விளக்கமறியலில்

261 0

பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக்கச்சேரி நிகழ்வின் போது பொலிஸாருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 19 பேர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்களை இம்மாதம் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக செய்தியாளர் கூறினார். 

பண்டாரவளை நகர சபை மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இசைக் கச்சேரி நிகழ்வின் போது இரவு 11 மணியளவில் மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மேடை மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதனைக் கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸாருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக செய்தியாளர் கூறினார். 

இதனையடுத்து இசைக்கச்சேரியை நிறுத்திவிட்டு வந்திருந்தவர்களை பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர். 

சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், இசைக் கருவிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது

Leave a comment