யாழ்ப்பாணம் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஜே.அனித்தா, கோலூன்றிப் பாய்தலில் புதிய தேசிய சாதனையை படைத்துள்ளார்.
யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமான 42வது தேசிய விளையாட்டு விழாவில் 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
அனித்தா சேர்.ஜோன் டாபட் சிரேஸ்ட மெய்வல்லுநர் போட்டியில் படைத்திருந்த தேசிய சாதனையை தானே முறியடித்துள்ளார்.
இவர் சேர்.ஜோன் டாபட் சிரேஸ்ட மெய்வல்லுநர் போட்டியில் 3.35 மீற்றர் உயரத்திற்கு கோலூன்றிப் பாய்ந்து சாதனை நிலைநாட்டியிருந்தார்.
இந்த நிலையில், யாழ். அல்பிரட் துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமான 42வது தேசிய விளையாட்டு விழாவில் 3.41 மீற்றர் உயரம் பாய்ந்து சாதனையை நிலைநாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.