பண்டாரவளை பிரதேசத்தில் இடம்பெற்ற இசைக்கச்சேரி நிகழ்வின் போது பொலிஸாருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளை நகர சபை மைதானத்தில் நேற்று இரவு இந்த இசைக் கச்சேரி இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரவு 11 மணியளவில் அங்கு மோதல் இடம்பெற்றுள்ளதுடன், மேடை மீது கல்வீச்சு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கட்டுப்படுத்த முற்பட்ட பொலிஸாருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக அத தெரண செய்தியாளர் கூறியுள்ளார்.
இதனையடுத்து இசைக்கச்சேரியை நிறுத்திவிட்டு வந்திருந்தவர்களை பொலிஸார் திருப்பியனுப்பியுள்ளனர்.
சம்பவத்தில் பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதுடன், இசைக் கருவிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.