றாகம, மெத்தேகொட பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த பெண் றாகம வைத்தியசாழலயில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
கனேமுல்ல, மெத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
கொலைச் சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.