போதைப்பொருள் ஒழிப்பு தினத்தின் மூன்றாவது நாளான இன்றைய தினம் பாடசாலை மாணவர்களிடையில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஆலோசனைகள் பொலிஸ்மா அதிர் பூஜித் ஜயசுந்தரவினால் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவாண் குணசெகர தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
நாடு பூராகவும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு பொதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கமைய பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் முச்சக்கரவண்டி, வேன் சாரதிகள், அதிபர் , ஆசிரியர், பெற்றோர் ஆகியோருக்கும் போதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டங்கள் முன்னெடுக்கபடவுள்ளன.
அதற்கமைய நாடுபூராகவும் பாடசாலையை சூழவுள்ள பகுதிகளில் போதைப்பொருள் வியாபாரம இடம்பெறும் பகுதிகள் தொடர்பான தகவல்களை அறிந்து சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கான ஆலோசனைகளும் பொலிஸ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.