பிரிவினைவாதிகளுக்கும் சமஷ்டிவாதிகளுக்கும் சொற்பதங்கள் அநாவசியமானது மாறாக இலக்குகளின் மீதே அவர்கள் முழுமையாக கனவம் செலுத்துவார்கள் என தெரிவித்த எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ,ஒருமித்த நாடு என்ற சொற்பதத்திற்குள் பிரிவினைவாத சமஷ்டி ஆட்சி முறைமையை உருவாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்கட்சி தலைவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டள்ளது.
மேலும் நாட்டில் தற்போது காணப்படுகின்ற பயிர்கொல்லி நோய்கள் , கடன்சுமை, உள்ளிட்ட பாரிய நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் செயற்படுகின்றமை குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.