நியூசிலாந்து சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் குறித்து, அந்நாட்டு பிரதமர் ஜோன் கீ அழுத்தம் கொடுக்க வேண்டும் என, சர்வதேச ரீதியிலிருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் மனித உரிமை அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளன.
இலங்கையில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதன் அவசியத்தை நியூஸ்லாந்து பிரதமர் ஜோன் கீ, ரணிலுக்கு எடுத்துரைத்து அதனை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசாங்கம் ஆட்சிமைத்துள்ள நிலையில், உண்மையான மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மனித உரிமை அமைப்புக்கள், புதிய ஆட்சி சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைக்க தொடங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளன.