1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக தடைப்பட்ட போக்குவரத்துச் சேவை நேற்று முதல் யாழில் இருந்து காங்கேசன்துறை வரைக்கும் தனியார் பஸ் சேவை ஆரம்பிக்கப்பபட்டுள்ளது.
1990ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட ஈழப்போரின் காரணமாக தடைப்பட்டு பகுதியளவில் இடம்பெற்ற காங்கேசன்துறை வீதியின் போக்குவரத்து நேற்று முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ் நகர் வரை சேவையில் ஈடுபடுகின்றது.
இறுதி யுத்தத்தின் பின்பு 2009முதல் தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் முன்பாகவிருந்தும் 2013 முதல் மாவிட்ட புரம் வரைக்கும் இடம்பெற்ற பஸ் சேவையே தற்போது காங்கேசன்துறை வரைக்கும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.